தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்று நான்கு வருடங்கள் ஆகும் நிலையில் இன்று 2025 ஆம் ஆண்டுக்கான கடைசி பட்ஜெட்டை தாக்கல் செய்தது. இந்த பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்துள்ள நிலையில் பல்வேறு துறைகளுக்கும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு முக்கிய அறிவிப்புகள் வெளியானது.

இந்த நிலையில் பட்ஜெட் தாக்கல் குறித்து அரசியல் கட்சித் தலைவர்கள் விமர்சனம் தெரிவித்து வருகின்றனர். வெற்று விளம்பரங்களும், ஸ்டிக்கர்களும் நிறைந்த நிதிநிலை அறிக்கை. வழக்கம்போல வெற்று அறிவிப்புகள் மட்டுமே பட்ஜெட் உரையில் இடம் பெற்றுள்ளது. திட்டங்கள் அறிவித்தால் மட்டும் போதுமா? நிறைவேற்றுவது எப்போது? என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கேள்வி எழுப்பியுள்ளார்.