ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டம் பெந்தூரத்தியில் உள்ள ஒரு வீட்டில் ஏசியில் பாம்புகள் இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சத்தியநாராயணா என்ற நபரின் வீட்டில், நீண்ட நாட்களுக்குப் பிறகு ஏசியை பயன்படுத்திய போது, அதன் உள்ளே பாம்பு மற்றும் அதன் குட்டிகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து அறிந்த பாம்பு பிடி வீரர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்புகளைக் பாதுகாப்பாக அகற்றினார்.

பல வீடுகளிலும் நீண்ட நாட்களாக பயன்படுத்தப்படாத ஏசி உண்டு என்பதால், அதற்குள் பாம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் இதை கவனமாக பார்த்து, ஏசிகளை சரிபார்த்து பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.