நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  பாஜக கட்சியின் பிரமுகர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டார். இதேபோன்று அந்த விழாவில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்களும்  பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழா முடிந்த பிறகு சீமான் காரில் கிளம்பினார். அப்போது அண்ணாமலை உடனடியாக காருக்குள் இருந்த சீமானின் கைகளைப் பிடித்துக் கொண்டு அண்ணா Fight பண்ணிட்டே இருங்க strong ஆ இருங்க. விட்டுடாதீங்க அண்ணா என்று கூறினார். பின்னர் அங்கிருந்து கிளம்பி சென்றார். அதாவது சீமான் மீது நடிகை விஜயலட்சுமி பாலியல் புகார் கொடுத்துள்ள நிலையில் அது தொடர்பாக 12 வாரத்திற்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால் உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இந்த வழக்கு தொடர்பாக சீமான் பேசிய பல வார்த்தைகள் சர்ச்சையாக மாறிய நிலையில் அவருக்கு கண்டனங்களும் குவிந்தது. அதே சமயத்தில் பெரியாரைப் பற்றி சர்ச்சையாக பேசியதால் தான் சீமான் குறிவைக்கப்படுகிறார் என்று பாஜகவினர் கூறினர். ஏற்கனவே பாஜகவுக்கு ஆதரவாக சீமான் செயல்படுவதாக ஒரு கருத்தும் பரவி வருகிறது. முன்னதாக ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அண்ணாமலை மற்றும் சீமான் இருவரும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவி கட்டிக் கொண்டனர். மேலும் இந்த நிலையில் தற்போது சீமானுக்கு அண்ணாமலை ஆறுதல் சொன்ன வீடியோ பிரபல சன் நியூஸ் இன்ஸ்ட்ராகிமில்   மிகவும் வைரலாகி வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by Sun News Tamil (@sunnews)