
ஐசிசி சாம்பியன்ஸ் டிராஃபி தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகளும் விளையாடியது. டாஸ் வென்ற முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து அணி 50 ஓவர் முடிவில் விக்கெட்டுகளை இழந்து 251 ரன்கள் அடித்தது. 252 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 49 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் அடித்து நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வென்று கோப்பையை தட்டிச் சென்றது. இந்த தொடர் முழுவதும் இந்திய அணியின் முன்னணி வீரர் கே.எல் ராகுல் சிறப்பாக செயல்பட்டார். குறிப்பாக ஆறாவது வரிசையில் பேட்டிங் செய்ய களமிறங்கினாலும் அரை இறுதி மற்றும் இறுதி போட்டிகளில் அழுத்தமான சூழ்நிலைகளில் சிறப்பாக விளையாடி அணி கோப்பை வாங்குவதில் முக்கிய பங்கு வகித்து வந்தார்.
இதன் மூலமாக கடந்த ஒரு நாள் உலகக் கோப்பை இறுதிப்போடியில் இந்தியாவின் தோல்விக்கு காரணமாய் அமைந்ததற்கு இவர் பரிகாரம் தேடிக்கொண்டார் என்றே கூறலாம். இந்த நிலையில் கே எல் ராகுல் குறித்து இந்திய முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ரேகர் கூறுகையில், “அவருக்கு இந்த வெற்றி மிக முக்கியமானது. கே எல் ராகுல் இருக்கும் ஒரே எதிரி பந்துவீச்சாளர் கிடையாது அவருடைய சொந்த மனநிலை தான். இந்த தொடரில் அவர் மிக நிதானமாக இருந்தார். தொடர்ந்து விளையாடுவதில் மகிழ்ச்சி அடைந்தார். அது பார்ப்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது’ என்று கூறினார்.