
ஹஜ் புனித பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமியர்களுக்காக சென்னை விமான நிலையம் அருகே நங்கநல்லூரில் ரூபாய் 65 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு ஹஜ் இல்லம் கட்டப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் இதற்கு நன்றி தெரிவிக்கும் வகையில், மஜக தலைவர் தமிமுன் அன்சாரி, முதலமைச்சர் மு க ஸ்டாலினை நேரில் சந்தித்தார். அப்போது அவருக்கு மெக்காவின் புனித ஜம் ஜம் தண்ணீர் குடுவையை பரிசாக வழங்கினார்.