கலைஞர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்தான் அஸ்வத் மாரிமுத்து. இவருடைய சில குறும்படங்கள் பாராட்டப்பட்டது. இவருடைய ஒரு குறும்படத்தை பார்த்து வெற்றிமாறன் இந்த படம் வெற்றி பெறவில்லை என்றாலும் ஒரு பையன் நல்ல ரைட்டராக வருவான் என்று சொன்னார். அதன் பிறகு தான் அசோக் செல்வனை வைத்து ஓ மை கடவுள் என்ற படத்தை இயக்கினார்.

இந்த படத்தின் வெற்றியை அடுத்து பிரதீப் ரங்கநாதனை வைத்து டிராகன் படத்தை இயக்கினார். இந்த படம் 100 கோடி வசூலை எட்டியது. இந்த படத்தின் ப்ரோமோஷனின் போது செய்தியாளர்களை சந்தித்த அஸ்வத் மாரிமுத்து ஒரு கோரிக்கை வைத்துள்ளார். அதாவது, ஓ மை கடவுளே வெளியான போது மகேஷ் பாபு ஒரே ஒரு ட்வீட் போட்டார். உடனடியாக தெலுங்கு ரசிகர்கள் படத்தை கொண்டாட தொடங்கினார்கள். அதேபோல டிராகன் படத்தையும் அவர் பார்க்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நிச்சயமாக இந்த படம் அவருக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். என்று பேசி உள்ளார்.