பாகிஸ்தான் அணி சாம்பியன்ஸ் ட்ராபி தொடரிலிருந்து வெளியேறியது மிகவும் சர்ச்சையாக மாறியுள்ள நிலையில் அந்த அணியை அந்த நாட்டின் முன்னணி வீரர்களே விமர்சித்து வருகிறார்கள். அதாவது டி20 உலக கோப்பை தொடரிலும் லீக் சுற்றுக்கு முன்பாகவே பாகிஸ்தான் வெளியேறிய நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரிலும் அரை இறுதிக்கு முன்னேறாமல் வெளியேறியது. நியூசிலாந்து மற்றும் இந்திய அணிகளிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்து வெளியேறிய நிலையில் முன்னால் வீரர்கள் அந்த அணியை கடுமையாக சாடி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாகிஸ்தான் நாட்டின் ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனம் பாகிஸ்தான் கேப்டன் முகமது ரிஷ்வான் உட்பட சிலரை பேட்டி எடுத்தது. இந்த நிகழ்ச்சியின் போது முகமது ரிஸ்வானை அந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் கேலி செய்துள்ளார். அதாவது முகமது ரிஷ்வான் ஆங்கிலத்தில் பேசிய நிலையில் அவர் பேசியது புரியவில்லை என்று கூறினார். அதோடு நாம் பேசும் மொழி முக்கியம் கிடையாது நாம் புத்திசாலித்தனமாக பேசுவதை தான் மற்றவர்கள் விரும்புகிறார்கள். நான் ரிஸ்வான் ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று சொல்லவில்லை. அதே சமயத்தில் அவருடைய பேச்சுக்கள் என்பது மிகவும் அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். மேலும் இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி விவாத பொருளாக மாறியுள்ளது.
Is Tabish Hashmi right or wrong to ridicule Rizwan’s English? pic.twitter.com/yfE94EFzqg
— M (@anngrypakiistan) February 28, 2025
