தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் தமிழ்நாட்டிற்கு நிதி வழங்கப்படும் என்று மத்திய மந்திரி தர்மேந்திர பிரதான் கூறியுள்ளார். அதாவது மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் மும்மொழி கல்வி கொள்கையை பிற மாநிலங்கள் ஏற்கும் போது தமிழ்நாடு மட்டும் ஏற்க முடியாதா என்று கேள்வி எழுப்பிய அவர் தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் நிதி வழங்கப்படும் என்று கூறினார். இதற்கு தற்போது பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது,
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்? மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத் துணிகிறாயே, ஆகுமா இந்த அக்கிரமம் என்றல்லவா கேட்கிறோம். உரிமையைக் கேட்கிறோம்; உபகாரமல்ல, இழந்ததைக் கேட்கிறோம்; இரவல் பொருளல்ல. எம்மிடமிருந்து பறித்துக்கொண்டதைக் கேட்கிறோம்; பிச்சையல்ல.” இந்த மூலக்கருத்தை உணரா முன்னம் வடவரின் கொட்டம் அடக்கப்படுவது முடியாத காரியமாகும். ” என்று பதிவிட்டுள்ளார்.
வாழ்ந்தவர்கள் என்பதை நினைவூட்ட வரலாறு இருக்க,எதற்காக வடவரிடம் பிடரியைக் கொடுத்துவிட்டுப் பிறகு மெள்ள மெள்ள வலிக்கிறது வலிக்கிறது என்று வேதனைக் குரலொலித்துக் கிடக்க வேண்டும்?
மாதாவுக்கு மத்தாப்பு வண்ணச் சேலையா கேட்கிறோம்?
அன்னையின் ஆடையை, அக்கிரமக்காரனே பிடித்திழுக்கத்… pic.twitter.com/gVzM9E9XEG
— Anbil Mahesh (@Anbil_Mahesh) February 15, 2025
