இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் வாட்ஸ் அப்பின் தலைமை நிறுவனமான மெட்டா, வாடிக்கையாளர்களை கவர்வதற்கு என்று புதுப்புது அப்டேட்களை அவ்வபோது அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நேற்று காதலர் தினத்தை முன்னிட்டு, புதிய அப்டேட் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது வாட்ஸ்அப் ப்ரொபைலில், இன்ஸ்டாகிராம் ப்ரொபைலை இணைத்துக் கொள்ளும் புதிய அப்டேட்டை விரைவில் வெளியிட உள்ளதாக தெரிவித்துள்ளது. அதாவது இதுவரை வாட்ஸ்அப் ப்ரொபைலில் பயணர் பெயர் மற்றும் தொலைபேசி எண் மட்டுமே இருந்தது. ஆனால் இனிமேல் இன்ஸ்டாகிராமின் பயனர் பெயர் அதாவது (username or id) இந்த வாட்ஸ்அப் ப்ரொபைலில் அனைவருக்கும் தெரியும் படி அப்டேட் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளது.