மசோதா மறு ஒப்புதலுக்காக ஆளுநருக்கு அனுப்பப்பட்டால் அதன் மீது முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டுவிட்டு மௌனமாக இருக்கலாமா? அப்படி மௌனமாக இருப்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது? நான் இந்த மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கவில்லை என்ற ஆளுநர் கூறுகிறார் என்றால் ஏன் என்று சொல்ல அவர் கடமைப்பட்டவராவார்
அப்படி இல்லை எனில் அவர் ஏன் ஒப்புதலை வழங்கவில்லை என்பது மாநில அரசுக்கு எப்படி தெரியும்? என ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
