தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கோவில்பட்டி பங்களா தெருவில் திருப்பதி(72) என்பவர் வசித்து வருகிறார். இவர் கோவில்பட்டியில் இருக்கும் தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளியில் வேன் கிளீனராக பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் ஐந்தாம் வகுப்பு படிக்கும் 10 வயது சிறுமி வேனில் பள்ளிக்கு சென்று வந்த போது திருப்பதி அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சிறுமி தனது பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் போக்சோ சட்டத்தின் திருப்பதியை கைது செய்தனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை எற்படுத்தியுள்ளது.
