சென்னை மாவட்டத்தில் உள்ள கோடம்பாக்கம் ரயில் நிலையம் அருகே ராஜகோபால் என்பவர் நின்று கொண்டிருந்தார். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ராஜகோபாலின் இயர் பட்ஸ் எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தில் விழுந்தது. அதனை ராஜகோபால் தேடிக் கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த ரயில் மோதி ராஜகோபால் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மாணவனின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.