
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளரான சீமான் தொடர்ச்சியாக பெரியாரைக் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக பெரியாரைக் கூறி வாக்கு கேட்குமா அல்லது காந்தி நோட்டுகளை கொடுத்து வாக்கு கேட்குமா என்று சீமோன் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நிலையில் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பொன்முடியிடம் இதுகுறித்து கேள்விகள் கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், பெரியார், அண்ணா, கலைஞர் வழியில் நடக்கும் ஆட்சி தான் திராவிட மாடல் ஆட்சி என்று முதல்வர் பல இடங்களிலும், பல நேரத்திலும் கூறியுள்ளார். அவருக்கெல்லாம் பதிலளிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. டூப்ளிகேட் போட்டோவை எடிட் செய்து வெளியிட்டவர் தான் சீமான். திராவிடம் என்பது இனம். தமிழ் என்பது மொழி இந்த இரண்டும் இணைந்தும் செயல்படுவது தான் திராவிடம் மாடல் ஆட்சி என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சியை யாராலும் தொட்டுக் கூட பார்க்க முடியாது. தன்னுடைய செய்தி வரவேண்டும் என்பதற்காக சீமான் பெரியார் குறித்த அவதூறாக தொடர்ந்து பேசி வருகிறார் என்று தெரிவித்தார்.