HMPV தொற்று பரவலை கண்காணித்து வருகிறோம். 2019ல் கொரோனா பருவ தொடங்கியதுமே உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது. தொற்று அறிந்தவுடன் உலக சுகாதார நிறுவனத்திடம் முழு தகவல்கள் பெறப்பட்டது. அந்த தொற்று குறித்து கண்காணிக்கும் பணியை தமிழக அரசு தொடங்கிவிட்டது 2001-ஆம் ஆண்டில் HMPV தொற்று முதல் முறையாக உறுதி செய்யப்பட்டது. மக்கள் பதற்றப்பட வேண்டாம். வெளியே செல்லும்போது மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளி பின்பற்ற வேண்டியது அவசியம்.

HMPV தொற்று ஏற்பட்டதால் 3 முதல் 5 நாட்களுக்கு சளி போன்ற பாதிப்புகள் இருக்கும். தொற்று ஏற்படும் பட்சத்தில் ஐந்து நாட்கள் தனிமைப்படுத்திக் கொண்டாலே சரியாகிவிடும். மக்கள் அச்சப்பட வேண்டாம். HMPV தொற்று வீரியம் மிக்கது அல்ல. வீரியம் குறைந்தது தான். தொற்று குறித்து அரசு கண்காணித்து வருகிறது முதல்வர் தொடர்ந்து கேட்டறிந்து வருகிறார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி அளித்துள்ளார்.