விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வானூர் தாலுகாவை சேர்ந்த பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். அவர்கள் கூறியிருப்பதாவது, வானூரில் வசிக்கும் ஞானமணி என்பவர் திரு சிற்றம்பலம் கூட்ரோடு பகுதியில் ஒரு பெண் நடத்தும் ஏலச்சீட்டில் சேர்ந்தார். அவர் மூலமாக நாங்களும் ஏலச்சீட்டில் சேர்ந்தோம். கடந்த 2021 ஆம் ஆண்டு முதல் அக்டோபர் மாதம் வரை மாதம் தோறும் பணம் செலுத்தியுள்ளோம். ஏலச்சீட்டு நிறுவனத்தை நடத்தியவர்கள் எங்களிடம் கூறாமல் ஏலச்சட்டை நிறுத்திவிட்டனர்.

நாங்கள் செலுத்திய பணத்தை திரும்பி கேட்டோம். ஆனால் அந்த பெண், அவரது 2 மகன்கள், மருமகள் பணத்தை தர மறுப்பு தெரிவித்தனர். ஐந்து பேரும் இணைந்து 250 பேரிடம் சுமார் 5.50 கோடி ரூபாய் பணத்தை வசூல் செய்தனர். அவர்கள் சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். எனவே ஐந்து பேர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்டு தர வேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளனர்.