உத்திர பிரதேசம் மாநிலத்தில் உள்ள நொய்டாவில் ஒரு தம்பதியினர் வசித்து வருகின்றனர். 45 வயதுடைய அந்த நபர் குடிபோதையில் தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். மேலும் அவரது மனைவி உடலுறவு கொள்ள மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது. இதனால் குடிபோதையில் இருந்த அந்த நபர் தனது அந்தரங்க உறுப்பை சமையலறை கத்தியால் வெட்டிக்கொண்டார்.
அது மட்டுமில்லாமல் கழுத்து பகுதியையும் கத்தியால் குத்திக்கொண்டார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
