உத்திரபிரதேசம் மாநிலத்தில் ஒரு பெண் இரு கணவருடன் வாழ்வதாக கூறிய வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது அங்குள்ள தியோரியா பகுதியில் ஒரு பெண் வசித்து வருகிறார். இந்த பெண் கழுத்தில் இரு தாலிகள் அணிந்துள்ளார். அவர் இரு ஆண்கள் மீது தோள் போட்டு போஸ் கொடுக்கிறார். அவர்கள் இருவரும் சகோதரர்கள் என்று கூறப்படும் நிலையில் மூவரும் ஒரே வீட்டில் ஒன்றாக வசிக்கிறார்கள்.

இது பற்றி அந்தப் பெண் கூறும்போது என்னுடைய இரு கணவர்களுக்காகவும் இரு தாலி அணிந்துள்ளேன். நாங்கள் மூவரும் ஒரே வீட்டில் மகிழ்ச்சியாக வாழ்கிறோம். நாங்கள் மூவரும் எங்கு சென்றாலும் ஒன்றாக செல்வோம். ஒன்றாக தான் சாப்பிடுவோம். மூவரும் சேர்ந்துதான் தூங்குவோம். என்று கூறியுள்ளார். என்னுடைய இரண்டு கணவர்களுடனும் நேரத்தை திறம்பட நிர்வகிக்கிறேன் என்று கூறுகிறார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பேசும் பொருளாக மாறி உள்ளது.

 

 

View this post on Instagram

 

A post shared by @digitalbharat563