பஞ்சாப் மாநிலத்தில் கரிசங்கரின் சௌரா கிராமம் உள்ளது. இந்தப் பகுதியில் ராம் ப்ரூஃப் என்ற 33 வயது நபர் வசித்து வருகிறார். இவர் கிட்டதட்ட 18 மாதங்களில் 11 பேரை கொலை செய்துள்ளார். இவரை தற்போது காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் பலத்திடுகிடும் தகவல்கள் தெரியவந்துள்ளது. அதாவது இவர் லிப்ட் கொடுத்து முதலில் அழைத்து செல்வார். குறிப்பாக ஆண்களுக்கு மட்டும்தான் லிப்ட் கொடுப்பார். பின்னர் அவர்களை கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட பிறகு அவர்களை கொலை செய்து அவர்களிடம் இருக்கும் பணம் போன்றவற்றை கொள்ளையடித்து விட்டு சென்றுவிடுவார்.
இவர் ஒரு முன்னாள் ராணுவ வீரரை இப்படித்தான் கொலை செய்து அவருடைய முதுகில் ஏமாற்றுபவர் என்று எழுதியுள்ளார். இவர் ஒரு 37 வயது வாலிபரை கொலை செய்யும்போதுதான் காவல்துறையினரிடம் பிடிபட்டார். நேற்று இவரை கைது செய்த நிலையில் அவர் கொலை செய்த பிறகு ஒவ்வொருவரின் காலை தொட்டு தான் செய்த குற்றங்களுக்கு மன்னிப்பு கேட்பாராம். இவர் போதை பழக்கத்திற்கு அடிமையானவர். மது போதையில் தான் இந்த குற்றங்களை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருக்கும் நிலையில் ஓரினச் சேர்க்கையின் காரணமாக குடும்பத்தினரால் கைவிடப்பட்டதும் தெரிய வந்துள்ளது.
