கனடாவை சேர்ந்த இளம் பெண் ஒருவர் தாஜ்மஹாலை பார்க்க வேண்டும் என்ற ஆசையில் சுமார் 10,000 கிலோ மீட்டர் கடந்து ஆக்ராவுக்கு வந்துள்ளார். ஆசையாக தாஜ்மஹாலை பார்க்க வந்த அவருக்கு, நடந்த அநீதி அவரை நிலை கொள்ளைய செய்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் 12ஆம் தேதி அந்த பெண் ஆக்ராவிற்கு வந்துள்ளார். இங்கு ஷாஹில் சர்மா என்ற இளைஞர் அந்த பெண்ணிற்கு அறிமுகம் ஆகி அவருடன் நட்புடன் பழகி உள்ளார். பின்னர் ஷாஹில் சர்மா அந்த பெண்ணிடம் தான் திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதி அளித்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து அந்தப் பெண் கர்ப்பம் தரிக்க இதனை ஷாஹில் சர்மாவிடம் கூற அப்போதுதான் அந்தக் கொடூரனின் உண்மை சுபவம் வெளியில் வந்துள்ளது. கனடா பெண்ணின் அந்தரங்க புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை எடுத்து வைத்துக் கொண்டு தனது நண்பர்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட கனடா பெண் தற்போது காவல் நிலையத்தில் தனக்கு நடந்த அநீதி குறித்து புகார் அளித்துள்ளார். இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
