தில்லியைச் சேர்ந்த ஷாஜியா என்ற பெண், குருகிராமுக்கு OLA வண்டியில் பயணம் செய்தபோது ஏற்பட்ட பயம் நிறைந்த அனுபவம் குறித்து தனது LinkedIn கணக்கில் பகிர்ந்துள்ளார். “இரவு நேரம் OLA-வில் சென்று கொண்டிருந்தபோது டோல்கேட் ஒன்றை தாண்டியவுடன் OLA ஓட்டுநர் காரை மெதுவாக ஓட்டத் துவங்கினார். அப்போது இருவர் காரின் எதிரே வந்து காரை நிறுத்த ஓட்டுனரும் காரை நிறுத்திவிட்டார்.
பின்னர் மேலும் இருவர் என 4 பேர் காரை சுற்றி நின்றனர். ஓட்டுனர் “நான் தவணை செலுத்தவில்லை” என்று கூறியது எனக்கு பயத்தை ஏற்படுத்தியது. நான் அது உங்கள் தனிப்பட்ட விஷயம் இங்கிருந்து புறப்படுங்கள் என்று ஓட்டுநரை வலியுறுத்தினேன். ஆனால் அவர் வெளியில் நின்று கொண்டிருந்த நபர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வது போன்று எனக்குத் தோன்றியது.
இதனால் எனக்கு அங்கு பாதுகாப்பு இல்லை என்ற உணர்ந்து கார் கதவை திறந்து கொண்டு அங்கிருந்து ஓட ஆரம்பித்தேன். OLA-வின் SOS பட்டனை பலமுறை அழுத்தியும் அது வேலை செய்யவில்லை. இது என் வாழ்வில் பயங்கரமான சம்பவம் நான் அந்த சமயத்தில் எவ்வளவு பயந்தேன் என்பதை என்னால் வெளிப்படுத்த கூட முடியவில்லை. நான் OLA-விடம் புகார் அளித்தேன். ஆனால் அது இப்போது 24 மணிநேரத்திற்கு மேல் ஆகியும், எனக்கு எந்த பதிலும் வரவில்லை.
பயணிகளின் பாதுகாப்பு என்பது ஒரு அம்சம் மட்டுமல்ல – இது ஒரு அடிப்படை பொறுப்பு. OLA CABS/பவிஷ் அகர்வால் – இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகப் பதிலளிக்கவும், பயணிகளின் பாதுகாப்பை ஒருபோதும் சமரசம் செய்யாமல் இருக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த பதிவில் குறிப்பிட்டிருந்தார். இந்த பதிவிற்கு சிலர் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் குறித்தும் கருத்துக்களாக பதிவிட்டுள்ளனர்.
https://www.linkedin.com/feed/update/activity:7276181482824507393
