பெங்களூர் அருகே நெலமங்கலம் பகுதியில் பயங்கர விபத்தில் சிக்கி ஆறு பேர் உயிரிழந்தனர். நெலமங்களம் பகுதியில் கார் மீது கண்டெய்னர் லாரி கவிழ்ந்தது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு குழந்தைகள் உட்பட ஆறு பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதுகுறித்து அறிந்த போலீசாரும், தீயணைப்பு விரைவுகளும் சம்பவ இடத்திற்கு சென்று கார் மீது கண்டெய்னர் லாரியை அப்புறப்படுத்தினர். அதன் பிறகு உயிரிழந்த நபர்களின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
