தமிழ்நாட்டில் வரத்து குறைவு மற்றும் மார்கழி மாத சிறப்பு பூஜைகள் உள்ளிட்டவைகள் காரணமாக பூக்களின் விலை அதிகரித்துள்ளது. மார்கழி மாதத்தில் கோவில்களில் பூக்கள் அதிகளவில் பயன்படுத்தப்படலாம். இதன் காரணமாக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோயம்புத்தூரில் ஒரு கிலோ மல்லிப்பூ 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 2000 ரூபாய் வரையில் விற்பனையாகிறது.

அதன் பிறகு ஒரு கிலோ முல்லைப் பூ 1800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதைத்தொடர்ந்து ஒரு கிலோ அரளிப்பூ 600 ரூபாய்க்கு விற்பனையாகிறது. மேலும் இதேபோன்று சென்னையில் ஒரு கிலோ மல்லி பூ 2500 ரூபாய் வரையிலும், ஜாதிமல்லி மற்றும் உள்ளே ஆகியவைகள் ஒரு கிலோ 800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.