
பீகார் மாநிலம் மதுபானி மாவட்டத்தில் உள்ள முஷாரி பகுதியில் உள்ள பள்ளி முதல்வர் ஒருவர் பள்ளி நேரத்தில் காய்கறிகள் வாங்கச் சென்றது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் சனிக்கிழமை விசாரணையைத் தொடங்கினார்.
நாள் ஒன்றுக்கு பத்து பள்ளிகளை வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் ஆய்வு செய்யும் கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் நேற்று குறிப்பிட்ட பள்ளி ஒன்றுக்கு தன்னார்வலர் ஒருவர் மூலமாக வீடியோ அழைப்பு மேற்கொண்டுள்ளார்.
அப்போது பள்ளியின் முதல்வர் வேலை நேரத்தில் காய்கறி வாங்குவதற்காக சென்றது தெரியவந்துள்ளது. மேலும் பள்ளி மாணவர்கள் சாக்கு பையில் அமர்ந்து வகுப்பை கவனித்தது தெரியவந்துள்ளது. இது குறித்து விசாரணை நடத்த தலைமைச் செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.