ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கடப்பாரங்கையன் தெருவில் சிவக்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவரது மகன் ஹரி வாலாஜாபேட்டையில் இருக்கும் அரசு பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு ஹரிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டது. அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு பரிசோதனை செய்து பார்த்த போது ஹரிக்கு டெங்கு காய்ச்சல் இருந்தது தெரியவந்தது.

கடந்த 7-ம் தேதி ஹரியை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேல் சிகிச்சைக்காக அவர் வேலூரில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி ஹரி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.