கர்நாடக மாநிலத்தில் உள்ள பால்கோட் பகுதியில் ஒரு நடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. அதாவது அந்தப் பகுதியில் பாசம்மா மற்றும் சசிகலா என்ற இரு பெண்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் இருவரும் இறந்த ராணுவ வீரர்களின் மனைவிகள். இதில் சசிகலா ஆன்லைனில் ஒரு ஹேர் டிரையர் ஆர்டர் செய்துள்ளனர். அதனை வாங்கிய நிலையில் பாசம்மா முதலில் அதனை பயன்படுத்தியுள்ளார். அதாவது சசிகலா அதனை வாங்கிய நிலையில் அவர் ஊரில் இல்லாததால் பக்கத்து வீட்டுக்காரரான பாசம்மாவிடம் அதனை வாங்கி சரியான முறையில் வேலை செய்கிறதா என்பது குறித்து சோதனை செய்து பார்க்குமாறு சசிகலா போனில் சொல்லியுள்ளார்.

அவர் அதனை ஆன் செய்தவுடன் திடீரென ஹேர் டிரையர் வெடித்து சிதறியது. இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் இரு கைகளின் முன் பகுதியையும் இழந்தார். அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் ஹேர் டிரையர் வெடித்து சிதறி பெண் தன் இரு கைகளையும் இழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.