திருவண்ணாமலை மாவட்டத்தில் சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கோமதி என்ற மகள் இருக்கும் நிலையில் திருமணம் ஆகி மணிகண்டன் என்ற கணவரும் 7 மாதத்தில் ஒரு கைக்குழந்தையும் இருக்கிறது. இவர்கள் திண்டிவனம் ரயில்வே நிலையத்தில் திருச்செந்தூருக்கு செல்வதற்காக காத்திருந்தனர். அப்போது செந்தூர் அதி விரைவு ரயில் வந்தது. இவர்கள் ரயிலில் ஏற முயன்ற போது எதிர்பாராத விதமாக கோமதி, மணிகண்டன் மற்றும் கைக்குழந்தை மூவரும் ரயிலுக்கும் தண்டவாளத்திற்கும் இடையே விழுந்துவிட்டனர். உடனடியாக பார்த்த சக பயணிகள் ரயிலை நிறுத்தினர். அதாவது முன் அறிவிப்பு இன்று ரயில் கிளம்பியதால் எதிர்பாராத விதமாக மூவரும் கீழே விழுந்த நிலையில் அவர்களை ரயிலை நிறுத்தி பத்திரமாக மீட்டனர்.
இவர்கள் மூவரும் சிறு காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர்த்தப்பிய நிலையில் அவர்களை காவல்துறையினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் அந்த பகுதியில் ஏராளமான பயணிகள் கூடி கூட்ட நெரிசல் காரணமாகத்தான் இப்படி நடந்ததாகவும் கூடுதல் ரயிலை இயக்க வேண்டும் எனவும் ஓட்டுனருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் ரயில் 15 நிமிடங்கள் தாமதமாக அங்கிருந்து கிளம்பியது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
