கடலூர் மாவட்டம் விருதாசலம் பகுதியை சேர்ந்த மகேஸ்வரி வெளிநாட்டில் வேலை மற்றும் நிறுவனத்தில் பங்குதாரராக இணைவதற்கான வாய்ப்புகள் என கூறி ரூ.72.87 லட்சம் மோசடி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதனால் மகேஸ்வரியை குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.

தொடர்ந்து அவரது கணவர் ராமலிங்கம் மற்றும் நண்பர் முகமது அசாருதீனை போலீசார் தேடி வருகின்றனர். தேனி மாவட்டம் போடியில் வெளிநாட்டு வேலை வழங்கும் நிறுவனம் நடத்தி வந்த ராமலிங்கம், மகேஸ்வரி ஆகியோர் சுருளிபட்டி பகுதியைச் சேர்ந்த சுமங்கலிபிரியாவிடம் வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக கூறி பணம் பெற்றுள்ளனர்.

இருவரும் சேர்ந்து சுமங்கலிபிரியாவின் உறவினர்கள் ஏழு பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்புகளையும், மேலும் கத்தாரில் உள்ள நிறுவனத்தில் பங்குதாரராக சேர்வதற்கான சந்தர்ப்பத்தை வழங்குவதாகக் கூறி ரூ.35.60 லட்சத்தை பெற்றுள்ளனர். மேலும் போலியான குவைத் விசா வழங்கியும் ரூ.3.06 லட்சம் மோசடி செய்துள்ளனர்.

மோசடி நடந்ததை அறிந்த சுமங்கலி பிரியா பணத்தை கேட்ட போது அவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதனையடுத்து சுமங்கலிபிரியா போலீசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, வழக்குபதிவு எய்து மகேஸ்வரியை கைது செய்தனர்.