
தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் மாநாடு நடந்து முடிந்த நிலையில் நடிகர் விஜய் கூட்டணி கட்சிகளுக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்தார். இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் தற்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனும் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, நடிகர் விஜய் ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம். எடுத்துக்காட்டாக விசிக மற்றும் தமிழக வெற்றி கழகம் இணைகிறது என்றால் அதை நான்தான் ப்ரபோஸ் செய்யணும். அது எங்களோட டிமாண்ட். என்ன மாதிரியான இடங்களை தருவீர்கள். எப்படி கூட்டணியில் பங்கு தருவீர்கள் என்று கேட்கலாம். எனக்கு துணை முதல்வர் பதவி கொடுங்க. 4 பேருக்கு நல்ல அதிகாரம் உள்ள பதவி கொடுங்க.
குறைந்தது 25 இடமாவது தாங்க. இதெல்லாம் தான் டிமாண்ட். நாங்க கேட்ட டிமாண்ட் மற்றும் எங்களுடைய கோரிக்கை எல்லாம் ஒத்துழைத்தாள் அதனை உத்திரவாத படித்துவிட்டு அறிவித்தால் வெற்றிகரமானதாக இருக்கும் என்று கூறினார். மேலும் பிரபல நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு திருமாவளவன் பிரத்தியேகமாக பேட்டி கொடுத்த நிலையில் அந்த பேட்டியை தற்போது எக்ஸ் பக்கத்தில் வைரலாக்கி வருகிறார்கள்.
பாடம் எடுத்திருக்கார் தலைவர் 🔥🩵
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்ற விஷயத்தை, @tvkvijayhq அவசரப்பட்டு அறிவித்திருக்க வேண்டாம் ” – திருமா
pic.twitter.com/xfd9yBzaj1— தோழர் சிவா ★ (@Sivaa_Comrade) November 1, 2024