
தமிழக அரசியலில் விஜயின் தமிழக வெற்றி கழகம் பற்றிய விமர்சனம் எழுந்துள்ளது. விஜய் நேரடியாக அரசியல் கட்சிகளை விமர்சித்து பேசினார். இந்த நிலையில் சீமான் விஜயின் கட்சி கொள்கைகள் குறித்து கடுமையாக விமர்சித்து பேசினார். சமூக நீதி பெண்ணுரிமை பற்றி பேசுவது தமிழ் தேசியம். அதைப் பேசி அரசியல் செய்து ஏமாற்றுவது திராவிடம். எனவே திராவிடக் கொள்கைகளை எந்த சூழ்நிலையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது.
கொள்கைக்கு எதிராக யார் வந்தாலும் எதிர் தான். அது தம்பியாக இருந்தாலும் சரி, என்னை பெற்றெடுத்த தாய் தந்தையாக இருந்தாலும் சரி. அவர்களும் எங்களுக்கு எதிரி தான். சினிமாவில் வில்லனும் கதாநாயகனும் எப்படி ஒன்றாக முடியாதோ அதே மாதிரி தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றாக முடியாது என பேசியுள்ளார்.