
பெங்களூரு கசவனஹள்ளியில் புதன்கிழமையன்று காரில் சென்ற குடும்பத்தினர் மீது மர்மநபர்கள் தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அனுப் என்ற நபர் தனது ஐந்து வயது மகான் மற்றும் மனைவியுடன் தீபாவளி கொண்டாட்டத்திற்கு தேவையான பொருட்களை வாங்கிவிட்டு காரில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது அவரது காரை வழி மறித்த மர்ம நபர்கள் காரில் இருந்து இறங்குமாறு கூறியுள்ளனர். அவர்கள் யார் என்று தெரியாததால் மறுத்துவிட்டு காரை நகர்த்தியுள்ளார். அப்போது அந்த மர்ம நபர்கள் காரின் மீது கல்லால் தாக்கியுள்ளனர். இதில் ஒரு கல் காரின் கண்ணாடியை உடைத்து உள்ளே அமர்ந்திருந்த ஐந்து வயது சிறுவனை காயப்படுத்தி உள்ளது.
இதனால் காரின் உள்ளே இருந்த பெண் பயத்தில் அலறியுள்ளார். இது தொடர்பான காணொளியை எக்ஸ் வலைதளத்தில் அனுப் பகிர்ந்த நிலையில் நெட்டிசன்கள் பலரும் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். மேலும் சிலர் இதுபோன்று அடிக்கடி நடப்பதாக பதிவிட்டுள்ளனர்.
https://x.com/AnoopKalekattil/status/1851677414398558334?t=s9jtlUGv73YTJzIYS9tLow&s=19
https://x.com/AnoopKalekattil/status/1851666330484621647?t=s9jtlUGv73YTJzIYS9tLow&s=19