இந்தியாவில் நாளை தொடங்க உள்ள 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நியூசிலாந்து அணி விளையாட உள்ளது. இந்த கிரிக்கெட் தொடர் பெங்களூரு, புனே, மும்பை ஆகிய இடங்களில் நடைபெற உள்ளது. இந்த தொடர் கிரிக்கெட் விளையாட்டுக்காக நியூசிலாந்தணி இந்தியாவிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. இந்த போட்டியில் இந்தியா கிரிக்கெட் அணி ரோகித் சர்மா தலைமையிலும், நியூசிலாந்து கிரிக்கெட் அணி டாம் லதாம் தலைமையிலும் விளையாட உள்ளன. இந்த டெஸ்ட் கிரிக்கெட் உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் உடன் தொடர்புடையது என்பதால் மிகவும் முக்கியமான தொடராக இரு அணிகளும் கருதுகிறது.

இந்த நிலையில் அணியின் தலைவர் ரோகித் சர்மா செய்தியாளர்களிடம் கூறியதாவது, இந்திய அணியின் இளம் வீரரான ஜெய் ஸ்வால் உண்மையாகவே மிகவும் திறமையான வீரர். அவர் தற்போது தான் சர்வதேச கிரிக்கெட்டில் கலந்துள்ளார். இருப்பினும் எந்த சூழ்நிலையிலும் திறமையாக ஆடும் திறமை படைத்தவராக உள்ளார். மேலும் சிறந்த பேட்ஸ்மேனுக்கான அனைத்து தகுதிகளும் அவரிடம் உள்ளது என கருதுகிறேன். இதுவே அவர் என்னுடன் தொடக்கவீரராக களம் இறங்குவதற்கு காரணமாகும். இந்த டெஸ்ட் தொடர் போட்டியின் போது அந்தப் போட்டியின் சூழல் எவ்வாறு உள்ளதோ? அதற்கேற்ற வகையில் விளையாடுவோம்.

சில தொடர்களாகவே நாங்கள் இந்த அணுகுமுறையவே செயல்படுத்தி வருகிறோம். தற்போது நடந்த கான்பூர் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து இரண்டு நாட்கள் மழை பெய்தது இதனால் அதிரடியாக விளையாடி வெற்றி பெற்றோம். இதேபோன்று தற்போது பெங்களூர் டெஸ்ட் தொடரில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் முதல் டெஸ்ட் எவ்வாறு அமையும் என்பது எங்களுக்கே தெரியவில்லை. எனவே போட்டியின் சூழல் எவ்வாறு அமையும் என்பதை பொறுத்து எங்களது அணுகுமுறையை செயல்படுத்துகிறோம். இருப்பினும் இந்த டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் நிச்சயமாக வெற்றி பெற நாங்கள் தொடர்ந்து முயற்சிக்கிறோம். இவ்வாறு செய்தியாளர்கள் சந்திப்பில் ரோகித் சர்மா கூறியுள்ளார்.