வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின்படி, வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சில முக்கியமான பகுதிகளுக்கு “ரெட் அலர்ட்” அளிக்கப்பட்டுள்ளது. இன்று கனமான மழையும், நாளை மிக கனமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது. இதனை அடுத்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, நேற்று இரவில் இருந்து மழை பெய்ய தொடங்கியுள்ளது. இதனால் நேற்றிரவு பயங்கர சூர காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது.

மறுநாள் காலை மிக அதிக கன மழையாக உருவெடுத்தது. இதனால் சென்னையில் பல்வேறு இடங்களில் நீர் தேங்கி உள்ளது. சென்னையில் மழை நீர் தேங்குவதற்கான காரணங்கள் என்னென்ன என்பது குறித்து வானிலை ஆய்வு அறிக்கையாளர் பிரதீப் ஜான் விளக்கியுள்ளார். மழைநீர் தேங்கியதற்கான காரணங்கள் குறித்து பிரதீப் ஜான் கூறியதாவது, சென்னை மாவட்டத்தில் பெய்யும் அனைத்து மழைநீரும் எண்ணூர், நோபியர், அடையாறு, கோவளம் ஆகிய நான்கு பகுதிகள் வழியாகவே வெளியேறுகின்றன. சென்னை மாவட்டத்தால் 15 சென்டிமீட்டர் மழை மட்டுமே தாக்குப் பிடிக்க முடியும். 20 சென்டிமீட்டர் மழையாக உயர்ந்தால் ஓரி இடங்களில் ஒரு நாள் மட்டும் நீர் தேங்கும்.

30 சென்டிமீட்டருக்கும் அதிகமான மழை பெய்தால் பள்ளிக்கரணை, புளியந்தோப்பு, வேளச்சேரி, முடிச்சூர் போன்ற பகுதிகளில் நீர்நிலைகளுக்கு அருகே உள்ள இடங்களில் மழைநீர் தேங்கும். 40 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்தால் சென்னையால் தாங்க முடியாது. மழை நீர் நான்கு நாட்களுக்கு மேல் தேங்கி நிற்கும். சென்னையில் வடிகால் அமைப்பது சாலைகளை பாதுகாக்க மட்டுமே, 40 சென்டிமீட்டருக்கு மேல் ஏற்படும் மழைக்கு எந்த வடிகாலும் அமைக்க முடியாது. இதனால் சென்னையின் சூழலை புரிந்து கொண்டு மக்கள் தான் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் இருக்க வேண்டும் என தெரிவித்தார்.