தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எவ வேலு கலைஞர் எனும் தாய் என்ற நூலகத்தை எழுதியுள்ள நிலையில் அந்த நூல் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலைஞர் எனும் தாய் நூலகத்தை வெளியிட அதனை நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக்கொண்டார். இந்த விழாவில் திமுக அமைச்சர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் நிகழ்ச்சியின் போது முதல்வர் ஸ்டாலின் தமிழக மக்கள் அனைவருக்கும் தாயாக இருந்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார். அதன் பிறகு தாய் காவியத்தை கவிதை வடிவில் தீட்டிய கருணாநிதிக்கு கலைஞர் எனும் தாய் என்ற நூலின் அமைச்சர் எ.வ. வேலு தமிழ் ஓவியம் தீட்டி உள்ளதாக பாராட்டினார். மேலும் தமிழகத்தில் உள்ள லட்சக்கணக்கான தொண்டர்களுக்கு தந்தையாகவும், தாயாகவும், தலைவராகவும் இருந்தவர் கருணாநிதி என்று புகழாரம் சூட்டினார்.
