
இந்தியாவைப் பொறுத்த வரையில் தினம்தோறும் ஏதாவது ஒரு மூலையில் பாலியல் பலாத்கார சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. அதில் சில சம்பவங்கள் உச்சகட்ட கொடூரத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளது. அதன்படி உத்திரகாண்ட் மாநிலம் நைனிடாலில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய 33 வயது செவிலியர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த ஜூலை 30ஆம் தேதி அந்தப் பெண் காணாமல் போனதாக கூறி தேடப்பட்டு வந்த நிலையில் அவருடைய உடல் கைவிடப்பட்ட இடத்தில் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் குற்றம் சாட்டப்பட்ட தர்மேந்திரா என்பவரை ராஜஸ்தானில் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.