மூத்த குடிமக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் பிரபலமான சேமிப்பு திட்டம் என்றால் அது பிக்சட் டெபாசிட் திட்டம் தான். இதன் மூலம் அவர்களுடைய அவசரகால தேவைகளுக்கு பயன்படும். பிக்சட் டெபாசிட் திட்டங்கள் மீதான வட்டிக்கு வரி விதிக்கப்படும். தற்போது தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் மூத்த குடிமக்களுக்கு மூன்று ஆண்டுக்கான பிக்சட் டெபாசிட் கணக்கு 7.75% வரை வட்டி வழங்குகின்றன. மூத்த குடிமக்களுக்கு பிக்சட் டெபாசிட் திட்டங்களில் அதிக வட்டி வழங்கும் வங்கிகள் குறித்து இதில் பார்க்கலாம்.
HDFC வங்கி 55 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.9 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ICICI வங்கி 15 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.8 சதவீதம் வட்டி வழங்குகிறது.
BOB வங்கி 399 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
கனரா வங்கி 444 நாட்கள் வரையிலான ஃபிக்ஸட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
பஞ்சாப் நேஷனல் வங்கி 400 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா வங்கி 444 நாட்கள் வரையிலான பிக்சட் டெபாசிட் திட்டத்திற்கு 7.75 சதவீதம் வட்டி வழங்குகிறது.
