சென்னையில் 17 வயது மாணவி ஒருவர் கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி கல்லூரி முடிந்தவுடன் வீட்டுக்கு திரும்பிய மாணவி அவரது அறைக்கு சென்று கதவை மூடிக்கொண்டார்.

சிறிது நேரம் கழித்து மாணவியின் நண்பர்கள் பதட்டத்துடன் அவரது வீட்டுக்கு ஓடி வந்தனர். அங்கு வந்த அவர்கள் மாணவியின் அக்காவிடம் மாணவி தங்களுக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாக கூறியதை தெரிவித்தனர்.

இதையடுத்து மாணவியின் அக்கா மற்றும் அவரது நண்பர்கள் அறையின் கதவை தட்டினர். நீண்ட நேரமாகியும் அவர் கதவை திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுபற்றி தகவல் அறிந்த காவல்துறையின சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பாக காவல்துறையினர் மாணவியின் நண்பர்களிடம் விசாரணை நடத்தியதில் மாணவிக்கு இன்ஸ்டாகிராமில் ஒருவர் ஆபாசமாக மெசேஜ் செய்ததுடன் அவரது போட்டோவை மாஃபிங் செய்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட போவதாகவும் மிரட்டியது தெரியவந்தது.

இதனால் அவருக்கு மன உளைச்சல் ஏற்பட்டு கல்லூரியின் நேரம் முழுவதும் அழுது கொண்டே இருந்த அவர் வீட்டுக்கு வந்த பின்பு தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரியவந்தது. மேலும் காவல்துறையினர் இச்சம்பவத்தை பற்றி வழக்கு பதிவு செய்து விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.