உலக அளவில் ஒப்பிடும்போது இந்தியாவில் மட்டும் தான் மிகக் குறைந்த தொலைபேசி அழைப்பு கட்டணங்கள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். மக்களவையில் இது தொடர்பாக விளக்கம் அளித்த அவர், ஒரு நிமிடத்திற்கு அழைப்பு கட்டணம் 53 பைசாவாக இருந்தது.

ஆனால் இந்தியாவில் தற்போது அது மூன்று பைசாவாக குறைந்துள்ளது. நாட்டில் தற்போது 117 கோடி மொபைல் இணைப்புகளும் 93 கோடி இணைய இணைப்புகளும் உள்ளன. 2025 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குள் நாட்டில் உள்ள 95.15 சதவீதம் கிராமங்கள் இணைய வசதியை பெறும் என்றும்.