தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா சமீபத்தில் நெபுலைசரை பரிந்துரை செய்திருந்த நிலையில் அதனை லிவர் டாக்டர் கடுமையாக கண்டித்திருந்தார். இதைத்தொடர்ந்து தற்போது நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ குடித்தால் உடம்புக்கு நல்லது என்று கூறியுள்ள நிலையில் அதனையும் லிவர் டாக்டர் கடுமையாக கண்டித்துள்ளார். அதாவது நடிகை நயன்தாரா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் செம்பருத்தி டீ குடித்தால் உடம்புக்கு மிகவும் நல்லது என்றும் அதனை தினசரி தான் குடித்து வருவதாகவும் கூறியுள்ளார். அதோடு அந்த டீ குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் பட்டியலிட்டுள்ளார்.
இந்த பதிவை பார்த்த லிவர் டாக்டர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்ததோடு அது முற்றிலும் தவறான தகவல் என்றும் கூறியுள்ளார். அதாவது அந்த டீயை குடிப்பதால் ஆண்களுக்கு testes பிரச்சினைகள் வரும் என்றும் பெண்கள் தினசரி அதனை குடித்து வந்தால் பூப்பெய்வது தள்ளிப்போகும் என்றும் கூறியுள்ளார். அதோடு குழந்தைகளின் உடல் எடையும் பாதிக்கும் என்று தெரிவித்துள்ளார். மேலும் செம்பருத்தி டீ டேஸ்டாக இருக்கும் என்று கூறினால் மட்டும் பரவாயில்லை. ஆனால் அதில் உடலுக்கு நன்மை இருக்கிறது என்று வெறும் விளம்பரத்திற்காக பொய்யான தகவலை கூறுவதை முற்றிலும் ஏற்க முடியாது. அதோடு சர்க்கரை நோய் இருப்பவர்கள் செம்பருத்தி டீ குடித்தால் மிகவும் நல்லது என்று கூறுவதும் தவறு. உங்களுடைய ஆரோக்கியத்திற்கு நல்ல மருத்துவரை அணுகி பயன் பெறுங்கள் என்று கூறியுள்ளார்.
This is cinema actress Nayantara who has more than twice the following of the other actress Samantha miselading her 8.7 million followers on a supplement called hibiscus tea.
If she had stopped at hibiscus tea is kind of tasty, that would have been ok. But no, they have to go… pic.twitter.com/d1fQCohsGU
— TheLiverDoc (@theliverdr) July 29, 2024
