மகாராஷ்டிரா மாநிலத்தில் நாக்பூர் என்ற பகுதி உள்ளது. இங்கு கடந்த சனிக்கிழமை சுமார் 2 மணி அளவில் ஒரு ஆணும் பெண்ணும் நிர்வாணமாக நடந்து சென்றுள்ளனர். அவர்கள் இருவரும் கணவன் மனைவி. இதனை அவ்வழியாக பைக்கில் சென்ற இருவர் பார்த்துள்ளனர். அவர்கள் நடுத்தர வயதுடைய ஒரு தம்பதி நிர்வாணமாக ஆடை எதுவும் இல்லாமல் நடந்து சென்றதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதனை தங்களுடைய செல்போனில் வீடியோவாக எடுத்து மறுநாள் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளனர்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் மிகவும் வைரலான நிலையில் காவல்துறையினர் அது தொடர்பாக விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இதைத் தொடர்ந்து காவல்துறையினர் அவர்களுடைய குடும்பத்தினரை எச்சரித்து இனி இது போன்ற சம்பவங்களில் ஈடுபடக்கூடாது என்று அறிவுறுத்தினர்.
