சென்னையில் மூதாட்டியை துண்டு துண்டாக வெட்டிக் கொலை செய்து உடலை அடையாற்றில் வீசிய தம்பதியை போலீசார் கைது செய்தனர். சென்னை எம்.ஜி.ஆர் நகர் சிவமூர்த்தி தெருவை சேர்ந்தவர் 78 வயது மூதாட்டி. விஜயாவை காணவில்லை என்று கடந்த சில தினங்களுக்கு முன்பு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். அப்போது மூதாட்டியின் வீட்டின் அருகே வசித்து வந்த பார்த்திபன் என்பவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துள்ளனர். ஆனால் பார்த்திபன் தனது மனைவி கீதாவுடன் தலைமறைவாகியுள்ளார். இதனை அடுத்து தனிப்படை போலீசார் விருதுநகர் பகுதியில் இருந்த பார்த்திபன் மற்றும் கீதா தம்பதியை கைது செய்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.