
மத்திய சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜூலை 22ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது விவாதம் நடந்து கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது என்று சட்டப்பேரவையில் பெண் எம்எல்ஏ குறித்து பீகார் முதல்வர் நிதீஷ் குமார் பேசி உள்ளது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
இட ஒதுக்கீடு சட்டத்திருத்தம் குறித்து ராஷ்டிரிய ஜனாத தள கட்சியின் பெண் எம் எல் ஏ ரேகா பஸ்வான் கேள்வி எழுப்பிய போது, உடனே எழுந்த முதல்வர் நிதீஷ் குமார், பெண்ணாகிய உங்களுக்கு எதுவும் தெரியாது என்று சர்ச்சைக்குரிய வகையில் ஆவேசமாக பேசினார். கடந்த சில நாட்களுக்கு முன்பு பழங்குடியின பெண் எம்எல்ஏவின் தோற்றம் குறித்து அவதூறாக பேசி இருந்த இவர் மீண்டும் சர்ச்சை பேச்சு பேசி இருப்பது புதிய பரபரப்பை கிளப்பியுள்ளது.