அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, தமிழகத்தில் திமுக அரசு ஆட்சி பொறுப்பை ஏற்ற 3 வருடங்களில் சொத்து வரி, பால் விலை மற்றும் மின்கட்டணம் போன்றவைகளின் விலைகள் அதிக அளவில் உயர்ந்துள்ளது. அதன் பிறகு கடந்த 200 நாட்களில் 594 படுகொலை சம்பவங்கள் நடந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 3 வருடங்களில் சட்டம் ஒழுங்கு முற்றிலுமாக சீரழிந்து விட்டது.

இன்னும் ஒரு வருடத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வர இருப்பதால் தற்போது கண்விழித்துக் கொண்டு அம்மா உணவகத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு செய்துள்ளார். அதிமுக ஆட்சியில்  தொடங்கப்பட்ட பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு நிறுத்திவிட்டது. திமுக கட்சியில் எப்போதும் உழைப்பவர்களுக்கு அங்கீகாரம் கிடைக்காது. குடும்ப வாரிசுகளுக்கு மட்டும் தான் அங்கீகாரம் கிடைக்கும். உதயநிதி ஸ்டாலின் தற்போது நிழல் முதல்வராக செயல்பட்டு வருகிறார். மேலும் துணை முதல்வர் பதவியை அமைச்சர் துரைமுருகனுக்கு வேண்டுமானால் வழங்கலாம் என்று கூறினார்.