சென்னை கடற்கரை-தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு இடையே நாளை முதல் அதாவது ஜூலை 23ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 14ஆம் தேதி வரை 55 மின்சார ரயில் சேவைகள் நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

 

அதன் பிறகு அதிகாலை முதல் காலை 9:20 மணி வரையும், மதியம் ஒரு மணி முதல் இரவு 10.20 மணி வரையும் வழக்கம்போல் கால் அட்டவணைப்படி மின்சார ரயில்கள் இயங்கும். மேலும் தாம்பரம் ரயில்வே யார்டு மேம்பால பணிகள் நடைபெற இருப்பதால் 55 மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.