சென்னை பெரம்பூரில் நடந்த பி எஸ் பி மாநில செயற்குழு கூட்டத்தில் அடுத்த மாநில தலைவராக ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் மறைந்த ஆம்ஸ்ட்ராங் உடன் 2006 முதல் இணைந்து பணியாற்றியவர். கடந்த 27ஆம் ஆண்டு முதல் கட்சியின் மாநில தலைவராக இருந்து வந்த ஆர்ம்ஸ்ட்ராங் கடந்த ஐந்தாம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இவருடைய இறுதி அஞ்சலிக்கு தேசிய தலைவர் மாயாவதி நேரில் சென்று இரங்கல் செலுத்தி இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதனைத் தொடர்ந்து பிஎஸ்சி மாநில தலைவராக தேர்வு செய்யப்பட்டிருக்கும் டாக்டர் ஆனந்தன் சென்னை பட்டாபிராமில் பிறந்தவர். சென்னையில் சட்டம் படித்த இவ்வாறு சுயமரியாதை திருமணம் செல்லாது என்று தீர்ப்புக்கு மேல் முறையீடு செய்து அதற்கு ஆதரவாக தீர்ப்பு பெற்றவர். மறைந்த ஆம்ஸ்ட்ராங் மீதான வழக்குகளில் வாதாடி அவருக்கு வெற்றி பெற்று தந்துள்ளார். இவருடைய சமூக சேவையை பாராட்டி அமெரிக்க பல்கலை இவருக்கு டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது