தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் சென்னையில் சமீபத்தில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில் தற்போது தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய தலைவராக வழக்கறிஞர் ஆனந்தன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் கொலை செய்யப்பட்ட ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடிக்கும் புதிய பொறுப்பு கட்சியில் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி அவர் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதாவது தலைவர் பதவி வேண்டாம் என்று பொற்கொடி கூறியதால் அவருக்கு ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.