
ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவில் வசிக்கும் பால் டாமிங்கஸ் என்ற 11 வயது சிறுவனுக்கு சூரிய ஒளி என்றாலே அலர்ஜியாம். இதனால் அவர் தன்னுடைய உடலின் மேல் சூரிய ஒளி படாத விதமாக மாஸ்க் மற்றும் ஆடைகளை அணிந்து வெளியில் சென்று வருகிறார். ஜெரோடெர்மா பிக்மெண்டோசம் என்ற அறிவகை நோய் பாதிப்பு மில்லியனில் ஒருவருக்கு ஏற்படுமாம்.
இதனால் தோல் புற்று நோய் எளிதில் உருவாக கூடும் . கடுமையான வெடிப்பு வறண்ட சருமம் போன்றவை இதன் தீவிர அறிகுறிகள். இது குறித்து அந்த சிறுவன் கூறுகையில் ,நான் பகலில் வெளியே செல்வேன் அதற்கு பாதுகாப்பாக ஆடையிலே அணிந்து செல்ல வேண்டும். கட்டாயம் மாஸ்க், கண் கண்ணாடி அணிந்து செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.