தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே மதுக்கூர் கீழக்குறிச்சி என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த சாலையில் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிளும், இருசக்கர வாகனமும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. அதாவது ராதிகா என்பவர் தன்னுடைய மகன் மோனிஷை அழைத்துக் கொண்டு தாய் வீட்டிற்கு ஸ்கூட்டியில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது விக்னேஷ் என்பவர் எதிரே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் எதிர்பாராத விதமாக மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டி நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. இந்தக் கோர விபத்தில் விக்னேஷ் (18), மோனிஷ் (9), மற்றும் ராதிகா (3) ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். இவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.