உத்திரபிரதேச மாநிலத்தில் பதேபுர் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விகாஸ் துபே . 24 வயதான இந்த வாலிபரை கடந்த 40 நாட்களில் ஏழு முறை பாம்பு கடித்ததாக கூறி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் சனி ஞாயிறு கிழமைகளில் தான் தன்னை பாம்பு கடிப்பதாகவும் ஒன்பதாவது முறை தன்னை பாம்பு கடிக்கும்போது தான் இறந்து விடுவேன் என்றும் பீதியை கிளப்பியிருந்தார். இது குறித்த தகவல் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சி ஏற்படுத்தி வந்தது.
இந்த நிலையில் இந்த இளைஞரை இதுவரை ஒரு முறை மட்டுமே பாம்பு கடித்துள்ளதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது. அவரை முதன்முறை பாம்பு கடித்ததால் பயம் ஏற்பட்டு தன்னை அடிக்கடி பாம்பு கடித்ததாக எண்ணி பயந்துள்ளார் .விகாஸின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக பத்தேபுர் ஆட்சியர் இந்துமதியின் உத்தரவின் பெயரில் தயாரிக்கப்பட்ட விசாரணை அறிக்கையில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. IAS இந்துமதி தமிழகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
