நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவான கல்கி 2898 AD திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் பாகுபலி படத்திற்கு பிறகு ஜாலியாக நடித்திருந்தார். இவருடன் படம் முழுவதும் கூடவே பயணிக்கும் புஜ்ஜி என்ற காருக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்திருந்தார். பான் இந்திய நடிகர்கள் பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். புராண கதையான மகாபாரத கதையை தழுவி அது போன்ற போர் டிஸ்டோபியன் காலகட்டத்தில் நடைபெறுவது போல எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.

கடந்த ஜூன் 27ஆம் தேதி திரைக்கு வந்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆபிஸில் பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. சுமார் ஆயிரம் கோடிக்கு மேல் வசூல் ஈட்டி உள்ள இந்த திரைப்படம் இரண்டாவது வார ஞாயிற்றுக்கிழமை ஆன நேற்று முன்தினம் 2.29 லட்சம் டிக்கெட்டுகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. முன்னதாக சன்னி டியோலின் கதர் 2 படம் 2.15 லட்சம் டிக்கெட் விலை விற்பனை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.