
மாநிலங்களவையில் எம்பிக்கள் பதவியேற்கும் போது தங்கள் தலைவர்களை வாழ்த்தி கோஷம் எழுப்பினர். இது பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் சபாநாயகர் ஓம் பிர்லா அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது உறுதிமொழி ஏற்ப விதிகளில் திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் இனி எம்பிக்கள் பதவியேற்கும் போது எந்த கோஷங்களையும் யாரும் எழுப்பக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் நடைமுறையில் இல்லாத ஒன்றை பின்பற்றக் கூடாது, உறுதிமொழிக்கான படிவத்தின் முன்பாகவும் பின்பாகவும் எந்த வார்த்தைகளையும் சேர்க்கக்கூடாது என்று அவர் கூறியுள்ளார்